| [ வெள்ளிக்கிழமை, 07 மார்ச் 2014, 08:06.27 மு.ப GMT ] |
இங்கிலாந்தின் வாரிங்கடன் மாகாணத்தில் ஜார்ஜிய ராங்கிங் என்ற 15 வயது இளம்பெண் skeletal dysplasia என்ற வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளதால் 2 அடி 8 அங்குலம்(80 சீ.மீ) உயரத்துடன் குள்ளமாக காணப்படுகிறார்.
இளம்பருவ வயதை அடைந்த ஜார்ஜிய தன் சின்னஞ்சிறு பாதங்களை கொண்டு நடப்பதற்கு பெரும் அவதிக்குள்ளாதால் இவரது பெற்றோர் பல மருத்துவர்களை நாடியுள்ளனர்.
எனினும் எந்த மருத்துவராலும் இப்பிரச்சனையை தீர்க்க தகுந்த சிகிச்சையளிக்க முடிவில்லை என்பதால், அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்கள் 18,000 யூரோக்கள் மதிப்பிலான பிரத்யேக சக்கர நாற்காலி ஒன்றை ஏற்பாடு செய்தனர்.
இதனால் அவரே அவரது வேலைகளை பிறரின் உதவியில்லாமல் செய்து கொள்கிறார்.
இந்நிலையில் தனது உயரத்தின் காரணமாக அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த போதும், மனம் தளராது மிடுக்கான தோற்றுத்துடன் வலம் வந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து ஜார்ஜிய கூறுகையில், தன் வாழ்வில் பலரால் கிண்டல் கேலிகள் இருந்தபோதும் அதை பெருட்படுத்தமாட்டார் என்றும் தன் நம்பிக்கையுடன் வாழ்ந்து சாதனை படைப்பார் எனவும் உத்வேகத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இவரது தைரிய உணர்வை பாராட்டி டிவிட்டர் தளத்தில் ஏராளமானோர், புகழ் மழை பொழிந்துள்ளனர்.
|
| Table Cell | Table Cell | Table Cell | Table Cell | Table Cell | Table Cell | Table Cell |
Friday, 7 March 2014
துணிச்சலின் சிகரம்: மனம் தளராத குள்ளச்சிறுமி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment