Quickribbon இங்கே என்ன சொல்லுது: March 2014
Table Cell Table Cell Table Cell Table Cell Table Cell Table Cell Table Cell

Create a website

Thursday, 13 March 2014

அமெரிக்காவில் முதன் முறையாக தனது விற்பனை நிலையத்தை திறக்கும் கூகுள்



அமெரிக்காவில் முதன் முறையாக தனது விற்பனை நிலையத்தை திறக்கும் கூகுள்

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் முதன் முறையாக தனது விற்பனை நிலையத்தினை திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Manhattan இல் Greene Street பகுதியில் திறக்கப்படவுள்ள இவ் விற்பனை நிலையம் தொடர்பான தகவல்களை Crains என்பவர் வெளியிட்டுள்ளதுடன், புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, 12 March 2014

உங்கள் தகவல்களை பேஸ்புக்கில் மறைக்க

உங்கள் தகவல்களை பேஸ்புக்கில் மறைக்க
[ வியாழக்கிழமை,12 மார்ச் 2014, 02:43.17 பி.ப GMT ]
இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதன் மீது மக்களுக்கு அதிக மோகம் உள்ளது.
இந்த பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களும் தினமும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது அதிகம் பெண்கள் தான் என்று கூறலாம்.
இனி இந்த கவலை உங்களுக்கு எப்பவும் வேண்டாம் உங்கள் தகவலை மொத்தமாகவே பேஸ்புக்கில் இருந்து மறைக்க இதோ எளிய வழி இருக்கிறது. பெரும்பாலும் இந்த வழி பலருக்கும் தெரிவதில்லை. அந்த வழிமுறையைக் காணலாம்.

வைரஸ் தாக்குதலா? பல்வேறு வசதிகளுடன் புத்தம் புதிய மென்பொருள் அறிமுகம்

வைரஸ் தாக்குதலா? பல்வேறு வசதிகளுடன் புத்தம் புதிய மென்பொருள் அறிமுகம்
[ புதன்கிழமை,12 மார்ச்  2014, 04:57.10 மு.ப GMT ]
விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac OS இயங்குதளங்களில் செயற்படும் கணனிகளை வைரஸ், மல்வேர் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு தரும் வசதியை FortiClient எனும் மென்பொருள் தருகின்றது.
இலவசமாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் இம்மென்பொருளானது பயர்வோலாக செயற்படக்கூடியதாகவும், Viruses, Spyware, Keylogger, Trojans, Adware மற்றும் Greyware போன்றவற்றிலிருந்தும் பாதுகாப்பு தருகின்றது.
இவை தவிர இணையத்தளங்களில் இருந்து தேவையற்ற விடயங்களை பில்டர் செய்து தரும் வசதியையும் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தரவிறக்கச் சுட்டி

Sunday, 9 March 2014

விரைவில் விற்பனைக்கு வரும் Blackberry Q20

விரைவில் விற்பனைக்கு வரும் Blackberry Q20

[ ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2014, 06:31.07 மு.ப GMT ]
கடந்த மாதம் இடம்பெற்ற வேர்ள்ட் மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் Blackberry நிறுவனமானது Blackberry Z3 மற்றும் Blackberry Q20 எனும் தனது புதிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் Blackberry Q20 கைப்பேசியானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அல்லது அக்டோபர் மாதமளவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இக்கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத போதிலும் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Instagram தளத்திலிருந்து புகைப்படங்களை தரவிறக்கம் செய்வதற்கு

Instagram தளத்திலிருந்து புகைப்படங்களை தரவிறக்கம் செய்வதற்கு


ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2014, 06:43.12 மு.ப GMT 
உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கினால் கொள்வனவு செய்யப்பட்ட புகைப்படங்களையும், சிறிய அளவிலான வீடியோக்களையும் பகிரும் தளமான Instagram பல மில்லின் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இத்தளத்தில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை இலகுவாகவும், விரைவாகவும் தரவிறக்கம் செய்து கொள்வதற்கு Instagram Downloader எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1.3MB கோப்பு அளவுடைய இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோக்களையும், ஸ்லைட் ஷோக்களையும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, 8 March 2014

ஹேம் பிரியர்களுக்காக அறிமுகமாகும் புத்தம் புதிய மவுஸ்


கணணி செய்தி
ஹேம் பிரியர்களுக்காக அறிமுகமாகும் புத்தம் புதிய மவுஸ் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 08 மார்ச் 2014, 02:16.39 மு.ப GMT ]
கணனி ஹேம் பிரியர்களுக்காக Logitech G602 எனும் புத்தம் புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட மவுஸ் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Windows 8, Windows 7, Windows Vista மற்றும் Mac OSX 10.6.8 ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இந்த மவுஸ் 11 பொத்தான்களை உள்ளடக்கியுள்ளது.
இரண்டு AA வகை மின்கலங்களில் 125 அல்லது 250 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் எடையானது 153g ஆகவும் காணப்படுகின்றது.

Logitech G602 Wireless Gaming Mouse Review
If you are a gamer in the market for a new mouse there are plenty of mice specifically designed for gamers each offering a wide range of features and functional that you can tailor to suit your gaming style and type of game you are playing. Being predominantly a first-person shooter (FPS) video gamer I have been using the Razer Mamba gaming mouse for some time, which is also a wireless mouse but unfortunately after a short time of using it wirelessly, I returned to a cable connection for accuracy and battery consumption issues.
This week I thought I would put a new wireless gaming mouse through its pace and have been testing the Logitech G602 wireless gaming mouse which offers a range of gaming specific features that have been added to help make your kill streaks even longer and the ability to adjust its sensitivity in-game.
One of the major benefits of using the Logitech G602 is that the gaming mouse can be powered by either one or two AA batteries allowing gamers to benefit from either 125 hours or a massive 250 hours of wireless gameplay when using two AA batteries. Also when the Logitech G602 mouse is not in use it automatically engages a hibernation mode that enables the batteries to conserve energy and last for an astonishing 1440 hours or 60 days without you needing to turn off the wireless mouse between uses.
The Logitech G602 is also equipped with Logitech’s Delta Zero sensor which has been created by Logitech to provide gamers with a DPI range between 250 and 2500 to choose from. But unlike other mice in the gaming market the Logitech G620 allows you to seamlessly alter the DPI in-game using two handy mouse buttons on the left side of the main left click mouse button. The two small DPI buttons enable you to quickly switch up and down depending on the DPI you require in game.
For example if you are using sniper rifle in a first-person shooter (FPS) video game you might want to reduce the DPI of your mouse for extra accuracy whilst you are fully scoped, then return it to normal when using a weapon firing from the hip. Both these can be complete at the simple click of a button and on the fly, providing fast response whilst in battle.
The Logitech G602 uses a wireless 2.4GHz connection offering a 2-millisecond report rate using a USB Nano receiver and has a handy battery indicator on the top of the mouse for easy viewing. You can also easily assign any keyboard keystroke or multi-command macro to any button with Logitech Gaming Software but there are a few limitations to the range of complex macros you can create with the provided software but most can be worked around using a slightly different setup.
The ergonomics of the Logitech G602 mouse are fantastic and with medium-sized hands the mouse fitted perfectly within my grip and provided support everywhere I needed it ,even during longer gaming sessions. The buttons on the left hand side are easy to trigger using your thumb and the weight of the mouse is not too heavy even with the two AA batteries weighing in at 153g, offering swift and accurate positioning whilst in game with positive feedback. On the base of the mouse there are four large slide pads which easily glide across my steel mouse mat. All-in-all the Logitech mouse receives full marks in my opinion for design and comfort and is very similar in size to the Razer Mamba which has been my mainstay gaming mouse for the past few years.
The Logitech G602 is fitted with 11 buttons in total which includes the standard middle scroll button and standard left and right buttons. On the right side there are anther six handy buttons that can be operated using your thumb and proved to be excellent communication buttons for in squad and platoon chat as well as providing quick keys for other in-game commands depending on your style and game.
The Logitech G602 is highly recommended if you are looking for something a comfortable responsive gaming mouse, with a huge battery life and instant DPI customisation in game, but probably wouldn’t be so good if you need to setup super complex macros for your game.
The Logitech G602 supports Windows and Mac and is compatible with Windows 8, Windows 7, Windows Vista and Mac OSX 10.6.8 or higher operating systems. For more information on the new Logitech G602 gaming mouse jump over to the Logitech website for details.
[ திங்கட்கிழமை, 08  2014, 02:16.39 மு.ப GMT ]
கணனி ஹேம் பிரியர்களுக்காக Logitech G602 எனும் புத்தம் புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட மவுஸ் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Windows 8, Windows 7, Windows Vista மற்றும் Mac OSX 10.6.8 ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இந்த மவுஸ் 11 பொத்தான்களை உள்ளடக்கியுள்ளது.
இரண்டு AA வகை மின்கலங்களில் 125 அல்லது 250 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் எடையானது 153g ஆகவும் காணப்படுகின்றது.

விண்டோஸ் 8 ஷார்ட்கட் கீகள்!

[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2014, 06:58.15 மு.ப GMT ]
நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறீர்களா? முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தினை இதிலிருந்து பெற்று வருகிறீர்கள் என்பது உறுதி.
முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுக்கும், இதற்குமான ஓர் அடிப்படை வேறுபாடு, இதன் டச் ஸ்கிரீன் இண்டர்பேஸ் தான். இதனை திரை தொடுதல் இன்றி, மவுஸ் மூலமாகவும் இயக்கலாம்.
இருப்பினும் இதுவரை முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் இயங்கிய செயல்பாடுகள் பல இதில் வேறாக இருக்கின்றன.
இந்த சிஸ்டத்தில் பல ஷார்ட்கட் கீகள், இதன் செயல்பாட்டிற்கெனத் தரப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கிய ஷார்ட் கட் கீகள் இங்கு காட்டப்படுகின்றன.
விண்டோஸ் கீயுடனான சில ஷார்ட் கட்கீ செயல்பாட்டினை பார்க்கலாம்.
விண்டோஸ் கீயுடன்
+ D: நீங்கள் எந்த விண்டோவில் இருந்தாலும் இது டெஸ்க்டாப்பிற்கு உங்களை அழைத்துச் செல்லும். விண்டோஸ் கீயினை மாற்றி மாற்றி அழுத்துகையில், அது விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் டெஸ்க் டாப்பிற்கு மாறி மாறி கொண்டு செல்லும்.
+ I: செட்டிங்ஸ் பேனல்(Settings Panel) திறக்கப்படும். இந்த ஷார்ட் கட் கீ, Control Panel, Personalization menu, Power menu (sleep, shut down, or restart) எனப் பல வசதிகளை உங்களுக்கு அளிக்கும்.
+ X: அட்வான்ஸ்டு விண்டோஸ் செட்டிங்ஸ்(Advanced Windows Settings) மெனு திறக்கப்படும். System, Device Manager, Command Prompt, மற்றும் பல வசதிகளை இதன் மூலம் பெறலாம்.
+ F: பைல்களைத் தேடும் வசதி கிடைக்கும். இந்த வசதி, குறிப்பாக பைல்களைத் தேடிப் பெறத் தரப்படுகிறது.
+ Period (“.”): அப்ளிகேஷன்களை ஒதுக்குகிறது. திரையின் வலது பக்கத்திற்கு அப்ளிகேஷன் ஒதுக்கப்படும். இதனால், மீதம் உள்ள விண்டோவின் இடத்தில், பல பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம். Windows Key + Shift + Period அழுத்தினால், அப்ளிகேஷன் இடது புறம் ஒதுக்கப்படும்.
+ E: கம்ப்யூட்டர் திறக்கப்படும். உங்கள் பைல்களையும், அடிக்கடி நீங்கள் திறந்து பயன்படுத்தும் போல்டர்களையும் இதன் மூலம் எளிதாகப் பெற முடியும்.
+ L: ஸ்கிரீன் லாக் செய்யப்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பணியிலிருந்து நீங்கள் உடனே விலகிச் செல்ல எண்ணினால், இந்த ஷார்ட் கட் கீ, ஸ்கிரீனில் உங்கள் செயல்பாடு லாக் செய்யப்படும். இதே கீயினை, பயனாளர் மாற்றிச் (switch users) செயல்படவும் பயன்படுத்தலாம்.
+ left arrow (and right arrow): அப்போதைய விண்டோவினை மூடும் அல்லது மாற்றும். இடது அம்புக் குறியுடன் செயல் படுத்தினால், அப்போதைய விண்டோ, திரையின் இடது புறமாக பெரிதாக்கப்படும். வலது அம்புக் குறி, வலது புறமாக இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளும்.
+ 0 - 9: டாஸ்க் பாரில் உள்ள அப்ளிகேஷன் களையும் புரோகிராமினையும் இயக்கத்திற்குக் கொண்டு வரும். டாஸ்க் பாரில் ஏற்கனவே பின் அப் செய்யப்பட்ட புரோகிராம்களை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.
இந்த எண் அவற்றின் வரிசை எண்ணைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 3 என்ற கீயுடன் செயல்படுத்தினால், மூன்றாவதாக உள்ள அப்ளிகேஷன் புரோகிராம் இயக்கத்திற்கு வரும்.
+ PrintScreen: ஸ்கிரீன் ஷாட் எடுக்க இதனைப் பயன்படுத்தலாம். இவ்வாறு எடுக்கப்படும் ஸ்கிரீன் ஷாட் படத்தினை, நீங்கள் தனியே பெயிண்ட் போன்ற ஒரு இமேஜ் புரோகிராமில் ஒட்டிப் பயன்படுத்த வேண்டியதில்லை. தானாகவே, அது Pictures என்னும் போல்டரில் சேவ் செய்யப்படும்.

விரைவில் உலகை கலக்க வரும் புத்தம் புதிய ஸ்மார்ட் கடிகாரம்

விரைவில் உலகை கலக்க வரும் புத்தம் புதிய ஸ்மார்ட் கடிகாரம்
[ சனிக்கிழமை, 08 மார்ச் 2014, 05:45.15 மு.ப GMT ]
பிரித்தானியாவைச் சேர்ந்த Blocks எனும் நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் மும்முரமாக களமிறங்கியுள்ளது.
இலகுவான பயனர் இடைமுகம் மற்றும் கவர்ச்சிகரமானதாக வடிவமைக்கப்பட்டுவரும் இக்கடிகாரம் GPS வசதியினையும் கொண்டுள்ளது.
எதிர்வரும் 2015ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கடிகாரம் தொடர்பான வீடியோ ஒன்றினை Blocks நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Blocks Modular Smartwatch In the Works
Blocks is a company from the UK that are in the process of developing a modular smartwatch, the Blocks Smartwatch can be seen in the video below.
The video below gives us a look at a concept of the Blocks Modular Smartwatch and how it will work, although according to the companies website, the device is currently in production.
The Blocks Modular Smartwatch is apparently designed to be fully customizable, and you will be able to choose from individual blocks to add to the device which perform different functions.
For example you could choose a block with a built in heart rate monitor, or one with a GPS tracker, to build the device to your specific needs.
It certainly looks very interesting from the video, and you can find out more information about the project over at Blocks at the link below.
As yet there are no details on how much the Blocks Modular Smartwatch will retail for, it is expected to hit the market some time in 2015.

HP அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் டேப்லட்

[ சனிக்கிழமை, 08 மார்ச் 2014, 08:14.31 மு.ப GMT ]
கணனி மற்றும் டேப்லட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனமான HP கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
HP 8 1401 எனும் இந்த டேப்லட் ஆனது 7.85 அங்குல அளவு, 1024 x 768 Pixel Resolution உயைட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் Allwinner A31 ARM Cortex A7 Quad Core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 0.3 மொகபிக்சலை உடைய கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இதன் விலையானது 169.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
HP 8 1401 Android Tablet Announced
HP has launched a new Android tablet in the US, the HP 8 1401, and whilst there doesn’t seem to be any press release for the device, it is now available to purchase from HP’s website.
The HP 8 1401 comes with Android 4.2.2 Jelly Bean and it features a 7.85 inch IPS display with a resolution pf 1024 x 768 pixels.
Processing comes in the form of an Allwinner A31 ARM Cortex A7 quad core processor and there is also 1GB of RAM and 16GB of built in storage.
Should you need additional storage, the HP 8 1401 comes with a microSD card slot, no details on what capacity microSD cards it supports.
The HP 8 1401 feature front and rear facing cameras, on the front we have a 0.3 megapixel camera, on the back there is a 2 megapixel camera.
This new Android tablet from HP comes with a 3800 mAh battery that will apparently give you up to 7 hours of usage, it also comes with 802.11 b/g/n WiFi.
You can find out more details about the HP 8 1401 Android tablet over at HP, the device is available to buy as of now for $169.99.

Friday, 7 March 2014

பெண்கள் தினம்

என் பார்வையில் பெண்கள் தினம்


ஒரு தாயின் கருவில் பெண் உரு கொண்டு வளர் நடைபோட்டு
மீண்டும் தாயாய் புணர் ஜென்மம் எடுத்து தன் வடிவத்தை
மறு ஓவியம் வரைந்தது போல தானும் ஒரு பெண் மகவை
தலைமுறை தலைமுறையாய் தாய் உருவம் கொள்வாள்

எனக்குள் பெண் என்பவளை பொன்னாய் மதித்திட வேண்டும்
புதுப் பண்போட்டு புது ராகம் இசைத்திட வேண்டும்
கால் படும் மண்ணாய் மதித்திடல் வேண்டாம் - அவள் மனம்
புண்ணாய் மாறிட செய்திடல் வேண்டாம் .

புரட்சி கண்ட பாரதியின் புரட்சி பெண்ணாக அவள் மாற
புரட்சி செய்து அவளை உயர்த்திட வேண்டும் -தினம்
வறட்டு மனதுடன் நான் தான் என்று குருட்டு பார்வைவேண்டாம்
சிட்டு குருவியாய் அவள் சுதந்திரத்தை மாற்றிடுவோம் .

அடுப்படியில் பெண்கள் எல்லாம் இருந்த நாட்கள் மாறி
அரசியல்படியில் பெண்கள் விரைந்து ஏறிடச் செய்வோம்
ஆண் தான் எல்லாம் என்ற ஒரு நிலையை மாற்றி
சமநிலையை பேண சரிநிகர் எனும் கோசம் கொள்வோம்


தயா

ஜுன் மாதத்தில் அறிமுகமாகின்றது LG G3

ஜுன் மாதத்தில் அறிமுகமாகின்றது LG G3
[ செவ்வாய்க்கிழமை, 04 மார்ச் 2014, 03:08.30 மு.ப GMT ]
LG நிறுவனத்தின் புதிய தயாரிப்பான G3 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகிய வண்ணம் இருந்தன.
இந்நிலையில் இக்கைப்பேசி எதிர்வரும் ஜுன் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான பெரிய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 2.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் இதில் 16 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியம் வாய்ந்த கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இக்கைப்பேசியின் விலை மற்றும் ஏனைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
LG G3 Could Launch in June
We’ve heard quite a lot of rumors about the launch of the upcoming flagship device from LG, dubbed as the LG G3. We haven’t seen the handset in any leaked image, but some information about the handset has surfaced in the past few months.
Recently, a rumor popped up on the internet suggesting LG G3 will hit retail in June, opposing previous rumors that hinted May as the official launch date.
The details about the handset are scarce, but it should come with top-of-the-line specifications. The handset should be powered by a quad-core processor with a clock speed of 2.2GHz processor under the hood, manufactured by LG in-house and is known LG Odin. LG G3 is expected to ship with a resolution of 2560 x 1440 pixels with a 5.5-inch display.
On the rear. the handset is rumored to come with a 16MP camera with a possible optical image stabilization plus that was launched in the LG G Pro 2 lately, and a possible fingerprint scanner.
Let’s just take this rumor with a grain of salt as there’s no solid proof of the event taking place in June. It might be in the pipeline, but it should take a few months before LG officially unveils the handset. We’ll update you as soon as we have more information.

இலவசமாக ஒன்லைனில் கோப்பு மாற்றம் செய்தவற்கு

இலவசமாக ஒன்லைனில் கோப்பு மாற்றம் செய்தவற்கு
[ வெள்ளிக்கிழமை, 07 மார்ச் 2014, 03:13.03 மு.ப GMT ]
ஒரு வகையான கோப்பினை பிறிதொரு வகையான கோப்பாக மாற்றுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அவ்வாறே இவ்வசதியை ஒன்லைனில் தரும் சில இணையத்தளங்களும் காணப்படுகின்றன. அவற்றில் சில குறைந்தளவான கோப்பு வகைகளையே மாற்றம் செய்ய முடிவதுடன், பெரும்பாலானவற்றில் பணம் செலுத்தியே இச்சேவையினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
எனினும் CloudConvert எனும் இணையத்தளமானது இச்சேவையினை முற்றிலும் இலவசமாக வழங்குவதுடன், நூறிற்கு அதிகமாக கோப்பு வகைகளை மாற்றும் வசதியை கொண்டுள்ளது.
அவற்றில் பல்வேறு Audio, Video, Document, Ebook, Archive, Image, Spreadsheet மற்றும் Presentation கோப்புகளும் அடங்கும்.

இணையத்தள முகரி

துணிச்சலின் சிகரம்: மனம் தளராத குள்ளச்சிறுமி


[ வெள்ளிக்கிழமை, 07 மார்ச் 2014, 08:06.27 மு.ப GMT ]
பிரிட்டனில் 2 அடி 8 அங்குலமே ஆன குள்ளமான இளம்பருவ பெண் ஒருவர் மிகவும் தைரியத்துடன் உலகை வலம்வந்து கொண்டிருக்கிறார்.
இங்கிலாந்தின் வாரிங்கடன் மாகாணத்தில் ஜார்ஜிய ராங்கிங் என்ற 15 வயது இளம்பெண் skeletal dysplasia என்ற வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளதால் 2 அடி 8 அங்குலம்(80 சீ.மீ) உயரத்துடன் குள்ளமாக காணப்படுகிறார்.
இளம்பருவ வயதை அடைந்த ஜார்ஜிய தன் சின்னஞ்சிறு பாதங்களை கொண்டு நடப்பதற்கு பெரும் அவதிக்குள்ளாதால் இவரது பெற்றோர் பல மருத்துவர்களை நாடியுள்ளனர்.
எனினும் எந்த மருத்துவராலும் இப்பிரச்சனையை தீர்க்க தகுந்த சிகிச்சையளிக்க முடிவில்லை என்பதால், அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்கள் 18,000 யூரோக்கள் மதிப்பிலான பிரத்யேக சக்கர நாற்காலி ஒன்றை ஏற்பாடு செய்தனர்.
இதனால் அவரே அவரது வேலைகளை பிறரின் உதவியில்லாமல் செய்து கொள்கிறார்.
இந்நிலையில் தனது உயரத்தின் காரணமாக அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த போதும், மனம் தளராது மிடுக்கான தோற்றுத்துடன் வலம் வந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து ஜார்ஜிய கூறுகையில், தன் வாழ்வில் பலரால் கிண்டல் கேலிகள் இருந்தபோதும் அதை பெருட்படுத்தமாட்டார் என்றும் தன் நம்பிக்கையுடன் வாழ்ந்து சாதனை படைப்பார் எனவும் உத்வேகத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இவரது தைரிய உணர்வை பாராட்டி டிவிட்டர் தளத்தில் ஏராளமானோர், புகழ் மழை பொழிந்துள்ளனர்.

Thursday, 6 March 2014

செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதன் மரணம்

[ வியாழக்கிழமை, 06 மார்ச் 2014, 01:37.51 மு.ப GMT ]
இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு இருதயம் பொருத்தப்பட்டு வருகிறது.
அது போன்று இருதயம் கிடைக்க நீண்ட நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது.
அதை தடுக்க செயற்கை இருதயம் தயாரித்து அதை பொருத்தும் பணியில் பிரான்ஸ் பயோமெடிக்கல் நிறுவனமான கார்மேட் ஈடுபட்டுள்ளது.
அந்த நிறுவனம் தயாரித்த முதல் செயற்கை இருதயம் 76 வயது இருதய நோயாளி ஒருவருக்கு கடந்த டிசம்பர் 18ம் திகதி பொருத்தப்பட்டு சிறந்த முறையில் இயங்கியது.
எனவே அவர் வைத்தியசாலையிருந்து விடைபெற்றுச் சென்றார். இந்த நிலையில் கடந்த 2ம் திகதி அவரது செயற்கை இருதயம் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
இவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை இருதயம் 75 நாட்கள் மட்டுமே இயங்கி உள்ளது. பொதுவாக இது போன்ற இருதயங்களை குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
கார்மேட் நிநுவனம் அதை நவீன மயமாக்கி நீண்ட நாட்கள் இயக்கும் வகையில் வடிவமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அழகான தோற்றம் வேண்டுமா? கேரட் சாப்பிடுங்கள்

[ வியாழக்கிழமை, 06 மார்ச் 2014, 01:10.09 பி.ப GMT ]
எத்தனையோ காய்கறிகள் இருந்தாலும் கேரட்டிற்கு இருக்கும் மதிப்பே தனிதான்.
கேரட் உடம்பின் அனைத்து உட்குழிவுகளிலும் உள்ள சளிப்படலத்தை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்கும்.
நாம் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்று சாப்பிட்டால் கெடுதல் விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும்.
கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும் எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் கேரட் சூப் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும். கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும்.
கேரட்டை அரைத்து அரைவேக்காடு முட்டையுடம், தேனும் கலந்து உண்டால் ஆண்மை சக்தி பேருகும்.
புற்றுநோய், ஏலும்புருக்கி, சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள் கேரட்சாறுடன் பாலும்தேனும் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன் உடல் பொலிவடையும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பழங்கள், காய்கறிகள் அதிலும் கேரட் மற்றும் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும்.
குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும்.